“கல்வி என்பது அடக்கம் , ஒழுங்கு , அறம் , நீதி இவற்றின் முன்மாதிரியாகும்” என்கிறார் அறிஞர் எட்மண்ட்பர்க் . தஞ்சை மண்ணில் 48 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்வியுடன் ஒழுக்கம் , அடக்கம் , நேர்மை , பணிவு ஆகிய நற்சிந்தனைகளைப் போதித்து நவ பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அறிவுச்சுடராய் ஒளி வீசிக்கொண்டிருக்கிறது .
“கல்வி என்பது அறியாமையை நீக்கி
அறிவை விளங்கச் செய்வது” என்கிறார்
தமிழறிஞர் திரு.வி.க மாணவர்களின் அறியாமை என்னும் இருளை அகற்றி அறிவு ஒளி ஊட்டுகின்ற
பற்றவுமிக்க தலைசிறந்த ஆசிரியர்களைக் பள்ளிதான் நவபாரத் .
“குறைவானக்
கட்டணம் நிறைவானக் கல்வி”
என்ற கொள்கையைக் கைக்கொண்டு , கொரோனா காலங்களில் மாணவர்கள் கல்வி தடைப்படக் கூடாது
என்ற உயரிய நோக்கத்தில் இணையவழி வகுப்புகளும்
நடைப்பெற்று வருகின்றன .கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.
10-ம் வகுப்பு , 11-ம் வகுப்பு
மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் அரசுப்பொதுத்தேர்வில் சாதனைப் படைக்க சிறப்புப்பயிற்சி
அளிக்கப்படுகிறது . மாணவர்கள் NEET மற்றும் JEE தேர்வுகளில் வெற்றிபெற சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு
வருகிறது .
ஒரு மாணவனிடம் மறைத்திருக்கும்
உண்மையான திறமை , அறிவு, ஆற்றல் சிந்தனை இவற்றை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வி என்கிறார் பேரறிஞர்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் . மாணவர்கள் தங்களின்
திறமை ஆற்றல் சிந்தனைகளை வெளிப்படுத்த யோகா , கராத்தே , குங்ஃபூ,கீ போர்டு வகுப்புகள்
நடைபெற்று வருகிறது .
மாணவர்கள் இரவு நேரத்திலும் விளையாட
மின்விளக்குகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் உள்ளது . சிறந்த உடற்பயிற்சி ஆசிரியர்களைக்
கொண்டு விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது . மாணவர்கள் மாவட்ட , மாநில மற்றும் தேசிய
அளவில் தடகளம் , கைப்பந்து மற்றும் கோ-கோ விளையாட்டுகளில் கலந்துகொண்டு வெற்றிவாகை
சூடி சாதனைப்படைத்து வருகின்றனர்.மேலும் இறகுப்பந்து உள் விளையாட்டரங்கமும் பள்ளியில்
இந்தாண்டு முதல் இயங்கி வருகிறது .
மாணவர்களின்
உயர்வையே தன்னலமாக கருதி அயராது உழைத்து வரும் நல்லாசிரியர் தாளாளர் மற்றும் முதல்வர் திரு.D.J . ஜான்சன் , நிர்வாக இயக்குநர் திரு. குணசிங் ஆண்டனிராஜ் ஆகியோர் வழிகாட்டுதலில் நவபாரத் பள்ளி மாபெரும்
சாதனைப் படைக்கும் என்பது உறுதி .
Comments
Post a Comment