தென்னிந்திய ஜூனியர் பேட்மிண்டன் போட்டி எங்கள் பள்ளி பேட்மின்டன் மாணவர்கள் சாதனை

         


தென்னிந்திய ஜூனியர் பேட்மிண்டன் போட்டி தஞ்சாவூர் வெல்டம் பேட்மிண்டன் அகாடமியில் நடைபெற்றது.நவ பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்குபெற்று சாதனை படைத்தனர்.

    பத்தாம் வகுப்பு மாணவி ரத்திக்கா தனிநபர்,கலப்பு இரட்டையர் மற்றும் இரட்டையர் பிரிவில் தென் இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். மேலும் ,மாணவன் ராகுல் மற்றும் தீபக் ஆகியோர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் முதலாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்தனர்.  மாணவன்  ஹரிஹரன் மற்றும் மாணவி  சாயிஷா ஆகியோர் தனிநபர்,கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தார்.  மாணவி ஆஷா தனிநபர்- மூன்றாம் இடம் ,கலப்பு இரட்டையர் - முதலாம் இடம்  மற்றும் இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தார் . ஒன்பதாம் வகுப்பு மாணவி  ரித்திகா  கலப்பு இரட்டையர் பிரிவில் மூன்றாம் இடம் பெற்றார் . சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் திரு ஜான்சன், பள்ளி நிர்வாக அலுவலர் திரு குணசிங் அந்தோணிராஜ்   மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர் .

Comments